×

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி: ஹெலிகாப்டர் மூலம் கடற்படை தளம் செல்கிறார்

சென்னை: டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தனி மோடி சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்த மோடியை முதல்வர், துணை முதல்வர், தலைமைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு செல்ல உள்ளார். கடற்படை தளத்தில் இருந்து விழா நடைபெறும் இடத்திற்கு சாலை வழியாக செல்கிறார். நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க உள்ளார். பிரதமர் வருகையையொட்டி 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே ரூ.3,770 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரெயில் முதல்கட்ட விரிவாக்க திட்டம், ரூ.293.40 கோடி செலவில், சென்னை கடற்கரை-அத்திபட்டு இடையே 21.1 கி.மீ. நீளமுள்ள 4-வது ரெயில் பாதை இணைப்பு, ரூ.423 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம்-கடலூர், மயிலாடுதுறை-தஞ்சை மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் இடையே 228 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்டு உள்ள ஒருவழி ரெயில் பாதை ஆகிய முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

ரூ.2,640 கோடி செலவில் கல்லணை கால்வாய் விரிவாக்கம், புதுப்பிப்பு மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்துக்கும், சென்னை தையூரில் ரூ.1,000 கோடி செலவில் ஐ.ஐ.டி.க்காக அமைக்கப்பட உள்ள டிஸ்கவரி கேம்பஸ் வளாகம் அமைப்பதற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். சென்னை ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் போர் பீரங்கியை இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

கூட்டணி கட்சிகள் பங்கேற்பு:

கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தாமகா கட்சிகள் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். பாமக சார்பில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, தேமுதிக சார்பில் பார்த்தசாரதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். பிரதமரின் சென்னை நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்பதால் தேர்தல் கூட்டணி இறுதியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தாமாகா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Tags : Modi ,Chennai ,Delhi , Delhi, Private Flight, Chennai, Prime Minister Modi
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...